Ads Area

குவைத்தில் குளிர் காரணமாக நிலக்கரியை எரித்த இலங்கை மற்றும் பிலின்பைன்ஸ் பணிப்பெண்கள் மூச்சுத் திணறி உயிரிழப்பு.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

குவைத்தில் ஸபா அல்-நாசர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பணிப் பெண்களாகப் பணிபுரிந்த இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சோக நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குவைத்தின் Sabah Al-Nasser பகுதியில் உள்ள ஒரு வீட்டின் ஒரே அறையில் தங்கியிருந்த இரு பணிப் பெண்களும் கடுமையான குளிரை சமாளிக்க கரியை எரித்து பயன்படுத்தியதால் எதிர்பாராதவிதமாக இரண்டு  பணிப்பெண்களும் நேற்று (15/02/21) உயிரிழந்திருக்கின்றனர். உயிரிழந்த பணிப்பெண்கள் இருவரும் பிலிப்பைன்ஸ் (வயது-46) மற்றும் இலங்கை (வயது-51) ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களாவர்.

சம்பவம் குறித்து பணிப் பெண்களின் கபீல் (ஸ்பான்சர்) கூறுகையில்,

பணிப்பெண்கள் தங்கியிருந்த அறையில் இருந்து நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியே வராத காரணத்தால் ஒருமுறைக்கு பலமுறை கதவைத் தட்டினோம் எந்த பதிலும்வராத காரணத்தால். சந்தேகமடைந்து வீட்டில் உள்ள மற்றவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இரண்டு பணிப்பெண்களும் இறந்து கிடந்தனர் எனவும் உடனே இது குறித்து போலிசுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து விரைந்து வந்த தடயவியல் அதாகாரிகள் மரணத்திற்கான காரணம் தொடர்பான ஆய்வு செய்ததில் மூடிய அறையில் நிலக்கரியை எரிந்ததால் அதிலிருந்து வெளியாகிய கார்பன் டை ஆக்சைடு மூலம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருவம் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 



 

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe