தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் பெண்களையும் பாதுகாப்புப் படைப் பிரிவுகளில் சேர்த்துக் கொள்ளவிருப்பதாக சவுதி அரேபிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்து அதற்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன.
சவுதி அரேபிய இராணுவம், விமானப் படை, கடற்படை, ஏவுகணை படை மற்றும் ஆயுதப்படை போன்ற பாதுகாப்புப் படைப்பிரிவுகளில் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
பாதுகாப்புப் படைப் பிரிவுகளில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், 155 செ.மீ உயரம் உடையவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும், குறைந்த பட்சம் உயர்நிலை கல்வித் தகைமை கொண்டோராகவும் இருக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதோடு அரச ஊழியர்கள் மற்றும் சவுதி அல்லாத வேறு நாட்டவர்களை மணம் முடித்தவர்கள் பாதுகாப்புப் படைப்பிரிவுகளில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி மூலம் - https://www.arabnews.com