Ads Area

பாம்பு தீண்டியதில் இரு மாதங்களேயான ஆண் சிசு மரணம் - மட்டக்களப்பில் பெரும் சோகம்.

பாம்பு தீண்டியதால் சுமார் இரண்டு மாதங்களேயான ஆண் சிசு ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு, சின்னப் புல்லுமலை பகுதியில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அதிகாலையில் மயக்க நிலையில் இருந்த குழந்தையை பெற்றோர் உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னரான குழந்தையின் பிரேத பரிசோதனையில் உள்ளங்கையில் பாம்பு தீண்டியிருப்பது தெரியவந்துள்ளது.

வெள்ளிக்கிழமை அரவம் தீண்டியதால் உயிரிழந்த சிசுவின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை கடந்த வருடம் திருமணமான தம்பதியினரின் குழந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe