Ads Area

இலங்கையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் களமிறங்கியுள்ள ட்ரோன்கள்.

சம்மாந்துறை அன்சார்.

இலங்கையில் டெங்கு இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களைக் கண்டறிவதற்கும் டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கும் வான்வழி நடவடிக்கைகளை மேற்கொள்ள ட்ரோன்கள் பயன்படுத்தப்படவுள்ளது.

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இரண்டு ட்ரோன்களை மேல் மாகாண ஆளுணரிடம் விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷனா இன்று வழங்கி வைத்தார்.

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கண்டறிய, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதம் மற்றும் காடழிப்பு ஆகியவற்றையும் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறும் நபர்களைக் கண்டறிய இத்தகைய ட்ரோன்கள் பயண்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe