Ads Area

கொவிட்-19 உம் பெண்களுக்கு எதிரான வன்முறையும் தொடர்பில் கலந்துரையாடல்.

(றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்)

கொவிட்-19 காரணமாக பல பாதிப்புகளை சமூகம் எதிர்கொண்டு வருகின்ற நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறை காணப்படுவதை உணர்ந்த அம்பாரை மாவட்டத்தில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனமான கேப்ஸ்சோ அனுசரணையில் கல்முனை பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எல்.எப்.சிபாயாவின் நெறிப்படுத்தலில் கல்முனை பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தர் யூ.எல்.பதுயுத்தீன் தலைமையில் பிரதேச செயலக கூட்டம் மண்டபத்தில் இன்று (22) நடைபெற்றது. 

கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதான வளவாளராக சட்டத்தரணி சுதர்சினி மனோகரன் கலந்து கொண்டு  விரிவுரைகளை நடாத்தினார். 

இதன் போது கொவிட் -19ஆல் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியினர் யார்? வீடும் வீடு சார்ந்த பகுதியில் ஏற்படும் வீட்டு வன்முறை, வீட்டு வன்முறை ஏற்படுவதற்கான பிரதான காரணம், 2005ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் தொடர்பான விளக்கம், சிறுவர்களுக்கு ஏற்படும் வன்முறைகளை எவ்வாறு கையாண்டு முறையிடுவது மற்றும் வீட்டு வன்முறையில் அரச உத்தியோகத்தர்கள் எவ்வாறு நடர்ந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற பல விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன. 





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe