சவுதி அரேபிய குடிமகன் ஒருவரினால் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த ஒருவரது வங்கிக் கணக்கில் தவறுதலாக செலுத்தப்பட்ட SR 65,000 தொகையைத் அந்த எத்தியோப்பிய நாட்டவர் திருப்பி உரியவரிடமே ஒப்படைத்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சவூதி அரேபிய ரியாத் பிராந்தியத்தில் உள்ள வாதி அல்-தவாசிர் பகுதியைச் சேர்ந்த சவுதி நாட்டவர் ஒருவர் தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவிருந்த 65 ஆயிரம் சவுதி ரியால்களை தவறுதலாக வேறு ஒருவரின் கணக்கில் வைப்பிலிட்டுள்ளார். பின்னர் வங்கி கணக்கை பார்வையிட்ட போது 65 ஆயிரம் ரியால்கள் தனது கணக்கில் வரவு வைக்கப்படாமையினால் ஆச்சரியமடைந்த அவர் வங்கியினை அனுகி விபரம் கேட்டுள்ளார்.
வங்கியில் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டதில் அந்தத் தொகை மூன்றாவது நபரின் கணக்கில் தவறாக அனுப்பப்பட்டிருப்பதை தெரிந்து கொண்டு பின்னர், அந்த தொகை யாருக்கு மாற்றப்பட்டது என்று கணக்கு வைத்திருப்பவரை தொடர்பு கொண்டார். இந்த தொகை எத்தியோப்பியன் நாட்டவரின் கணக்கில் தவறாக மாற்றப்பட்டது. உடனடியாக அந்த எத்தியோப்பிய நபரை தொடர்பு கொண்டு தவறுதலாக அனுப்பப்பட்ட விவரத்தை சொல்லியுள்ளார்.
அவர் உடனடியாக எந்தத் தயக்கமும் காட்டாமல் சிறிதும் மாற்றங்கள் இல்லாத SR 65000 தொகையையும் அந்த சவூதியின் குடிமகனின் கணக்கிற்கே திருப்பி அனுப்பினார். இவரின் நேர்மையினை வங்கி ஊழியர்கள் மற்றும் குறித்த சவுதி நாட்டைச் சேர்ந்தவர் என அனைவரும் பாராட்டினர்.