தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சூடான், லெபனான், பிரேசில், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, தான்சானியா, கானா, எத்தியோப்பியா, கினியா (Guinea), சியரா லியோன் (Sierra Leone) ஆகிய பத்து நாடுகளைச் நேர்ந்த வெளிநாட்டினர் ஓமான் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓமானின் கொரோனா தடுப்புக் குழு மற்றும் ஓமான் அரசு ஆகியவற்றின் தீர்மானத்திற்கு அமைய இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஓமான் அரசு அறிவித்துள்ளது.
எதிர் வரும் பெப்ரவரி 25 முதல் 15 நாட்களுக்கு இத் தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமனி குடிமக்கள், வெளிநாட்டு தூதர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் ஆகியோர் இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளனர்.