சவுதியில் தவக்கல்னா கட்டாயம் என்பதை அனைவரும் அறிவீர். இதற்கு முன்னர் 'ஹுரூப்'யில் உள்ளவர்களுக்கு தவக்கல்னா வேலைசெய்யாமல் இருந்த நிலையில், இப்பொழுது ஹுரூப் (Huroob) கொடுக்கப்பட்ட தொழிலாளர்களும் தவக்கல்னா பதிவு செய்து பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தவக்கல்னா செயலியை 17 மில்லியன் பயனர்களுக்கு மேல் பயன்படுத்துகின்றனர்.
அதேபோல் இக்காமா காலாவதி ஆனவர்களும், விசிட் விசாவில் உள்ளவர்களும் தவக்கல்னா பதிவு செய்யலாம்.
நீங்கள் பயன்படுத்தும் மொபைலில் vpn உபயோகப்படுத்தக் கூடாது. Vpn உபயோகப்படுத்தினால் பதிவு செய்ய இயலாது.
இதற்கு மேலும் உங்களுக்கு வேலைசெய்யவில்லை என்றால் தவக்கல்னா கஸ்டமர் சர்வீஸ் ஐ தொடர்பு கொள்ளுங்கள்-தவக்கல்னா சேவை மைய தொலைபேசி எண் 800 1289999 டயல் செய்து இணைப்பு கிடைத்தவுடன், எண் 1 அழுத்த வேணடும், அடுத்து மொழி தேர்வுக்கு எண் 2 யை அழுத்த வேண்டும், அடுத்து விளக்கம் பெற எண் 1 யை அழுத்த வேண்டும், அடுத்து உதவியலாளர் தொடர்புக்கு எண் 7யை அழுத்தியவுடன், உதவியாளர் இணைப்பில் வருவார், அவரிடம் பேசி தவக்கல்னா இணைப்பை பெற முடியும்.
கூடுதல் விபரம் - https://saudigazette.com.sa
தமிழ் செய்திக்கு நன்றி - சவுதி தமிழ் நிவுஸ்.