பெப்ரவரி 22ஆம் திகதி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை நாடாளுமன்ற உரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
2 நாட்கள் மட்டுமே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கையில் தங்கியிருப்பதால், அவரின் நாடாளுமன்ற உரை இரத்துச் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
எவ்வாறாயினும் பாகிஸ்தான் பிரதமருக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்ற இடமளித்தமை தொடர்பில் இந்தியா இராஜதந்திர மட்டத்தில் அதிருப்தி வெளியிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், கொரோனாவினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிக்கும் விவகாரம் சர்ச்சையாக இருப்பதால், பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை நாடாளுமன்ற உரை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பின்னணியிலேயே பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை நாடாளுமன்ற உரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி - Siva Ramasamy - Thamilan lk