தகவல் - சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள அஜ்மனில் நான்கு மாத சம்பளத்தை வழங்காத முதலாளியை (Sponsor) ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
அஜ்மனில் ஒரு சிற்றுண்டிச்சாலைக்கு வெளியில் இடம் பெற்ற இக் கொலைச் சம்பவம் அருகில் உள்ள சீ.சீ.டிவி கெமறாவில் பதிவாகியிருந்தமையின் அடிப்படையில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட இடம் ஒன்றுக்கு சம்பள விடையம் தொடர்பில் பேச தனது முதலாளியை வரவழைத்த குற்றவாளி தான் பொலித்தீன் பை ஒன்றில் மறைத்து வைத்திருந்த கத்தியினை வெளியில் எடுத்ததனைக் கண்ட முதலாளி ஓட்டம் பிடித்துள்ளார் இருந்தும் முதலாளியை துரத்திச் சென்று அவரின் வயிற்றுப் பகுதியில் பல முறை குத்தி, பின்னர் தொண்டைப் பகுதியினை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
கொலையாளியை கைது செய்த போலிஸார் நடாத்திய விசாரனையில்,
தனக்கு நான்கு மாதமாக சம்பளம் ஏதும் வழங்கவில்லை, பல முறை எனது சம்பளத்தைக் கேட்டும் எனது முதலாளி சம்பளத்தை வழங்கவில்லை மேலும் எனது முதலாளியை நம்பி அவரிடம் மேலும் 9 ஆசிய நாட்டவர்களுக்கு நான் விசா அனுப்பி அமீரகத்திற்கு வரவழைத்திருந்தேன் அவர்களுக்கும் எனது முதலாளி நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை, எங்களுக்கான ஓழுங்கான இருப்பிடங்களையும் அமைத்துத் தரவில்லை. நான் அமீரகத்திற்கு அழைத்து வந்த 9 பேரும் நீதான் எங்களை அழைத்து வந்தாய் நீதான் எங்களுக்கான ஊதியத்தை பெற்றுத் தர வேண்டும் என என்னிடத்தில் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தனர் இது விடையம் தொடர்பில் எனது முதலாளியிடம் எடுத்துக் கூறியும் அவர் எந்த வித ஊதியங்களையும் வழங்கவில்லை அதனால்தான் அவரைக் கத்தியால் குத்திக் கொன்றேன் என கொலையாளி தெரிவித்துள்ளார்.
அமீரக பொலிஸார் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.