தகவல் - சம்மாந்துறை அன்சார்.
குவைத் சர்வதேச விமான நிலையம் எதிர் வரும் மார்ச் 7ம் திகதி முதல் 24 மணி நேரம் இயங்கும் என குவைத் விமானப் போக்குவரத்துத்துறை இயக்குனர் அப்துல்லா அல் - ராஜி (Abdullah Al Rajhi) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவித்தல் சகல விமான சேவை நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் குவைத் விமான நிலையம் ஒரு நாளைக்கு அதிக பட்சமாக 1000 பயணிகள் மட்டுமே உள்வாங்கப்பட்டிருந்தனர்.
குவைத் நாட்டவரல்லாத ஏனையோருக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை தொடந்து அமுலில் இருக்கும் என்றும் தடை நீக்க அறிவிப்பு வரும் வரை அவர்களுக்கு குவைத்திற்குல் நுழைய முடியாது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் நாட்டு குடிமக்கள், அவர்களது உறவினர்கள், வீட்டுப் பணியாளர்கள் ஆகியோர் இத் தடையிலிருந்து விதிவிலக்களிக்கப்பட்டுள்ளனர், இவர்கள் குவைத்திற்குல் நுழைந்தவுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
செய்தி மூலம் - https://gulfnews.com