தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியா ரியாத் நகரில் உள்ள பழைய வீடு ஒன்றில் தலை முடிக்கு பயண்படுத்தும் சட்டவிரோத போலி தேங்காய் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வந்தவர்களை சவுதி அரேபியா பொலிஸாரும், உணவு மற்றும் மருந்து ஆணைக்குழுவினரும் கைது செய்துள்ளனர்.
இவர்கள் தயாரித்து வந்த தேங்காய் எண்ணெய்யினை அமெரிக்க நிறுவனம் ஒன்றின் மூலம் பிலிபைன்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்டது என போலியாக விளம்பரம் செய்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
இவர்களது தொழிற்சாலை அமையப் பெற்ற பழைய வீடு ஒன்றினை சுற்றி வளைத்த சவுதி அரேபிய பொலிஸார் இவர்களிடமிருந்து எண்ணெய்யினை பதப்படுத்தும் மற்றும் வடிகட்டும் இயந்திரம், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெற்றுப் போத்தல்கள், 2500 விநியோகத்திற்கு தயார் நிலையில் இருந்த எண்ணெய் போத்தல்கள் ஆகியவற்றினையும் கைப்பற்றியுள்ளனர்.
செய்தி மூலம் - https://gulfnews.com