Ads Area

உலக புற்று நோய் மாதத்தை முன்னிட்டு மருதமுனையில் மாபெரும் விழிப்புணர்வு.

(றாசிக் நபாயிஸ், ஏ.எல்.எம்.சினாஸ்)

உலக புற்றுநோய் தினம் பெப்ரவரி 04ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு பெப்ரவரி மாதம் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு பொது மக்களுக்கு புற்றுநோய் தொடர்பான அறிவுத்தல் நிகழ்வுகள் தற்போது நாடு பூராவும் இடம்பெற்று வருகின்றன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையியுடன் இணைந்து மருதமுனை 'ரைடர்ஸ் கப் சைக்கிள் சவாரிக் கழகம்' ஏற்பாடு செய்த மாபெரும் சைக்கிள் சவாரி விழிப்புணர்வு நிகழ்வு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஏ.ஆர்.எம்.அஸ்மி தலைமையில் இன்று (20.02.2021) நடைபெற்றது.

மருதமுனை பிராந்திய கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு சைக்கிள் சவாரி பெரியநீலாவணை வழியாகச் சென்று மருதமுனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, கல்முனை நகர் ஊடாக சென்று பிராந்திய சுகாதார பணிமனையை வந்தடைந்தது.

நிகழ்வின் போது புற்றுநோயை தடுப்பதற்கு தினமும் கடைப்பிடிக்க வேண்டிய உணவு பழக்க முறைகள் மற்றும் மருத்துவ குறிப்புக்கள் பற்றியும் பொதுமக்களுக்கு  ஒலிபெருகி ஊடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe