நாடு திரும்ப முடியாத நிலையில் வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த 291 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.
ஐக்கிய அரபு ராஜியத்தின் டுபாய் நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல்-1510 எனும் விமானம் ஊடாக இன்று அதிகாலை 2.55 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு நாடு திரும்பியவர்களில் பெரும்பாளானவர்கள் பணிப்பெண்களாக ஐக்கிய அரபு ராஜியத்திற்கு சென்றிருந்தவர்கள் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கமைய, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்கள் அனைவரும் இராணுவத்தினால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Madawala News.