தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறுவதற்கு காலாவதியாகாத (Expire) வெலிட் (Valid) பாஸ்போட் கட்டாயம் இருக்க வேண்டும் என சவுதி அரேபிய ஜவசாத் அலுவலகம் அறிவித்துள்ளது.
சவுதியிலிருந்து சொந்த நாடுகளுக்கு விடுமுறை செல்வதாக இருந்தாலும் அல்லது பைனல் எக்சிட் செல்வதாக இருந்தாலும் வெலிட் பாஸ்போட் கண்டிப்பாக இருக்க வேண்டும் இல்லையேல் அது பயணத்தில் தடைகளை ஏற்படுத்தும்.
சவுதி அரேபிய ஜவசாத் அலுவலகத்திடம் ஒருவர் “ பைனல் எக்சிட் செல்வதற்கு பாஸ்போட்டை புதுப்பிக்க வேண்டுமா..?? எனது பாஸ்போட் காலாவதியாகிவிட்டது, காலாவதியான பாஸ்போட்டோடு நான் பைனல் எக்சிட் செல்ல முடியுமா எனக் கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே ஜவசாத் அலுவலகம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
பைனல் எக்சிட் (Final Exit) செல்வதற்கான விசா எலெக்ரோனிக் சேர்விஸ் (electronic services) மூலமாக வழங்கப்படும் அதற்கு கண்டிப்பாக வெலிட் பாஸ்போட் (Valid Passport) அவசியம். குறைந்தது 2 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வகையிலாவது பாஸ்போட் வெலிட் (Valid) ஆக இருக்க வேண்டும் எனவும் ஜவசாத் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.