தகவல் - சம்மாந்துறை அன்சார்.
குவைத்தில் கொரோனா பரவலை தடுக்கும் முகமாக வெளிநாட்டினருக்கு குவைத்திற்குல் நுழைய அண்மையில் இரண்டு வார கால தடை விதிக்கப்பட்டிருந்து, தற்போது இரு வார கால தடை நிறைவுறும் நிலையில் எதிர் வரும் பெப்ரவரி 21 முதல் வெளிநாட்டினர் மீண்டும் குவைத்திற்குல் நுழைய அனுமதிக்கப்டுவார்கள் என குவைத் அரசு அறிவித்துள்ளது.
ஆனால் குவைத் அரசு தடை செய்துள்ள 30 நாடுகளைச் சேர்ந்தவர்கள் குவைத்திற்குல் நேரடியாக நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என குவைத் அரசு மேலும் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 21 முதல் குவைத்திற்குல் நுழையும் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 7 நாட்களுக்கு தங்களது சொந்த செலவில் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக 30 தினார் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹோட்டல்களில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது அந்த வகையில்,
01. 5 நட்சத்திர ஹோட்டல்களில் தனி அறைக்கு 270 குவைத் தினார்களும், இரட்டை அறைக்கு 330 குவைத் தினார்களும், உணவுக்காக 10 தினார்களும் அறவிடப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
02. 4 நட்சத்திர ஹோட்டல்களில் தனி அறைக்கு 180 குவைத் தினார்களும், இரட்டை அறைகளுக்கு 240 குவைத் தினார்களும், உணவிற்கு 8 தினார்களும் அறவிடப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
03. 3 நட்சத்திர ஹோட்டல்களில் தனி அறைக்கு 120 குவைத் தினார்களும், இரட்டை அறைகளுக்கு 180 குவைத் தினார்களும், உணவிற்கு 6 தினார்களும் அறவிடப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குவைத்திற்கு வரும் பயணிகள் 7 நாட்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு அவர்களது இருப்பிடங்களில் 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டும் எனவும் குவைத் அரசு தெரிவித்துள்ளது.