Ads Area

சாய்ந்தமருதை சேர்ந்த AM.சுல்பிகார் அவர்கள் பிரதி திட்டமிடல் பணிப்பாளராக (Deputy Director) பதவி உயர்வு....!!!!

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றும் சாய்ந்தமருதை சேர்ந்த AM.சுல்பிகார் அவர்கள் பிரதி திட்டமிடல் பணிப்பாளராக (Deputy Director) பதவி உயர்வு பெற்றுள்ளார்கள். 

இந்நியமனம் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.இவர் கல்முனை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்க்கது.

2007ம் ஆண்டு இலங்கை திட்டமிடல் சேவையின் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் திட்டமிடல் சேவையில் இணைந்த இவர் அம்பாறை மாவட்ட செயலகம்,சாய்ந்தமருது, சம்மாந்துறை,லஹுக்கல மற்றும் நிந்தவூர் பிரதேச செயலகங்களில்  உதவி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார். 

கடந்த வருடம் திட்டமிடல் சேவையின் தரம் II ( class - II) க்கு தரமுயர்த்தப்பட்ட இவர் அடுத்த மாதமளவில் தரம் -I (class - I ) க்கு தரமுயர்த்தப்படவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(ஆதம்பாவா ஜலீல்)




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe