சம்மாந்துறை மலையடிக்கிராமம் இரண்டிற்குட்பட்ட இப் பாதையானது இதுவரை செப்பனிப்படாமல் காணப்படுகிறது. சிறு சிறு தனியார் வீதிகளே கொங்க்றீட் இட்டு காபட்டும் போடும் இக்காலத்தில் இவ்வீதியானது பல முறை பிரதேச செயலகம் சார்ந்த இப் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தருக்கும், பிரதேச சபை தவிசாளர் மற்றும் பலருக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இப் பாதையானது அன்னளவாக 100 மீற்றர் தூரம் கொண்டது. இப்பாதையில் ஒரு பாலர் பாடசாலையும் காணப்படுகிறது. அப் பாடசாலையின் வருடாந்த விழாவிற்கு பல அரசியல் அதிதிகள் பிரதேச சபை தவிசாளர் உறுப்பினர்கள் வந்தும் சென்றிருக்கிறார்கள், அவர்களிடமும் பல முறை எத்தி வைக்கப் பட்டிருக்கிறது இருந்தும் அவர்களும் அதனை கண்டு கொள்ளவில்லை.
தாறுஸ்ஸலாம் பாடசாலை மற்றும் ஹுதா பள்ளிவாசல் போன்ற இடங்களை அண்டிய இப்பாதையில் மக்கள் போக்குவரத்து அதிகமாக காணப்படுவதால் பலர் இப்பாதையில் பல தடவை விழுந்து எழுவதை காண முடிகிறது.
எனவே இப் பாதையை செப்பனிட உரிய நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்கிறேன்.
எம் எச் முகம்மது ஹாரிஸ்
நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்
சம்மாந்துறை.