Ads Area

கோவிட் உடல்களை இரணைதீவில் புதைக்கும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

கொரானா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று காலை 09 மணியளவில் இரணைமாதாநகர் இறங்குதுறையில் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.

இரணைதீவு மக்களும் கிராம மட்ட மைப்புக்கள் மற்றும் கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரும்  இணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் பங்கு தந்தையர்களும், சிவில் அமைப்புக்களும் கலந்து கொண்டனர்

கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடமாக இரணைதீவு பகுதியை தெரிவு செய்துள்ளதாக நேற்றைய தினம் அமைச்சரவை பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.

இந்த தீர்மானம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்ற நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு அறிவித்தல் ஏதுமின்றி இரகசியமாக சென்ற குழு அதற்கான சிபாரிசினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று மேற்கண்ட பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணைதீவு பூர்வீக குடிகளாக இருந்த மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு இறுதியில் வட மாகாண ஆளுனர் மற்றும் சம்பத்தப்பட்ட அதிகாரிகள் மகஜர்களும் அனுப்பி வைத்துள்ளனர்.

battinews.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe