Ads Area

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களை நம்பவேண்டாம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களை நம்பவேண்டாமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. 

சமூக வலைத்தளங்கள் ஊடாக போலி விளம்பரங்களை வெளியிட்டு, பலர் நிதிமோசடியில் ஈடுபடுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வாறான விளம்பரங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்கள் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் மாத்திரமே வெளியிடப்படும். இதனால் சமூக வலைத்தளங்களினூடாக வெளியிடப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை நம்பி ஏமாறவேண்டாமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe