(வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுப்பிரசித்திபெற்ற சம்மாந்துறை தமிழ்க்குறிச்சி ஸ்ரீ பத்ரகாளியம்பாள் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இன்று (25) வியாழக்கிழமை காலை 7.45மணிமுதல் 9.13மணி வரையிலான சுபமுகூர்த்தவேளையில் நடைபெறும்.
பாலஸ்தாபன பிரதமகுரு சிவாகமவித்யாபூஷணம் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் பாலஸ்தாபனக்கிரியைகளை நடாத்திவைப்பார்.
சாதகாசிரியராக சிவஸ்ரீ சண்முக மயூரவதனக்குருக்கள் செயற்படுவாரென ஆலயத்தலைவர் வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.