தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவின் மக்கா நகரில் புனித கஃபாவிற்கு போர்த்தும் துணியின் 7 துண்டுகளை மக்கா அல் ஷாஷா மாவட்டத்தில் உள்ள சவுதி போஸ்ட் (Saudi Post) கிளை வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப முற்பட்ட இரண்டு பாகிஸ்த்தான் நாட்டவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரனைகளுக்காக காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
கிஸ்வா (Kiswa) துணி என்பது புனித கஃபாவிற்கு மேலாக போர்த்தப்படும் கறுப்பு நிறத்திலான துணியாகும். இத் துணியானது புனித கஃபாவில் வருடம் ஒரு முறை போர்த்தப்படுகின்றது.