மே 13 முதல் அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என சவுதியின் பொது போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
ரயில்கள் மற்றும் பேருந்துகள் உட்பட பொது போக்குவரத்து சேவைகளில் உள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், மே 13 முதல் (ஷவ்வால் 1) கொரோனா வைரஸக்கு எதிரான தடுப்பூசி எடுப்பதன் மூலம் அனைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று அரேபியாவின் பொது போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவுக்கு இணங்காத நிலையில், கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று பி.சி.ஆர் நெகட்டிவ் ரிப்போர்ட்டை ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் அவர்கள் பணிபுரியும் ஸ்தாபனத்தின் சார்பில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்குண்டான செலவை அந்த நிறுவனமே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த சட்டத்தை கட்டாயமாக அமல்படுத்தும் வகையில் குறிப்பிட்ட மே 13 ஆம் தேதிக்கு முன்பே தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துமாறு பொதுப் போக்குவரத்தின் அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கிடையில், சுகாதார அமைச்சகம் கூறியதாவது, சவுதி அரேபியாவின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மையங்கள் உள்ளன என்றும், இதன் மூலம் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களும் தடுப்பூசி பெற்றுக் கொள்வது தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் கூறியுள்ளது.
அதேபோல் விளையாட்டு மையங்கள் மற்றும் ஜிம்களில் பணிபுரிபவர்களும் தடுப்பூசி கட்டாயமாகும். மேலும் உணவகங்கள், காபி கடைகள், உணவு விற்பனை நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் மற்றும் பெண்கள் அழகு நிலையங்கள் ஆகியவற்றில் வேலை செய்பவர்களுக்கு மே 13-க்குல் தடுப்பூசி கட்டாயம் எடுத்திருக்க வேண்டும் என்று ஊரக விவகார மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
தடுப்பூசி பெறாதவர்கள் ஒவ்வொரு வாரமும் pcr எதிர்மறை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடவடிக்கை ஒவ்வொரு நபருடைய ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான முயற்சிகளில் ஒரு பகுதியாகும் என்று விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் 500க்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் தடுப்பூசி பெற Sehhaty அப்ளிகேஷன் மூலம் முன்பதிவு செய்து இலவசமாக தடுப்பூசி பெற்றுக் கொள்ளலாம்.
நன்றி - சவுதி நிவுஸ்.