Ads Area

மாளிகைக்காடு மையவாடிப் பிரச்சினைக்கு தீர்வு : ஆரம்பக்கட்ட வேலைகள் இன்று ஆரம்பம்

மாளிகைக்காடு நிருபர்

கடந்த பல மாதங்களாக கடலரிப்பில் ஜனாஸாக்கள் வெளிவந்த மாளிகைக்காடு மையவாடி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் ஆரம்பகட்ட வேலைத்திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து  வைக்கப்பட்டது. 

பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் உட்பட பிராந்திய அரசியல்வாதிகள் பலரும் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைக்கு இணங்க கரையோரம் பேணல் திணைக்களம் முன்னெடுக்கும் இவ்வேலைத்திட்டத்தின் சகல ஆரம்பகட்ட பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டு நிர்மாண பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், கரையோரம் பேனல் திணைக்கள பொறியியலாளர் முகம்மட் றியாஸ், காரைதீவு பிரதேச கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரி எஸ்.அஹமத் மஹ்ரூப், காரைதீவு பிரதேச சபை பிரதித்தவிசாளர் ஏ.எம். ஜாஹீர், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் பிரத்யோக செயலாளர் நௌபர் ஏ பாவா, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினர் றிஸ்லி முஸ்தபா, கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளர் சபை உறுப்பினர் யூ. எல்.என். ஹுதா, பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம். இஸ்மாயில், மாளிகைக்காடு கிழக்கு வட்டார மு.கா அமைப்பாளர் எம்.எச்.எம். நாஸர், மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர், செயலாளர், முக்கிய நிர்வாகிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe