Ads Area

சவுதியில் முஸ்லிம் என நினைத்து தவறுதலாக அடக்கம் செய்யப்பட்ட இந்து சகோதரரின் உடலைக் கோரி அவரது மனைவி போராட்டம்.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியாவில் மரணமடைந்த இந்து சகோதரர் ஒருவரின் உடலை அவர் முஸ்லிம் என தவறுதலாக நினைத்து சவுதியில் அடக்கம் செய்யப்பட்டதனை அடுத்து தனது கணவரின் உடலுக்கு இந்து முறைப்படி இறுதிச் சடங்கு செய்ய அவரது உடலை இந்தியாவுக்கு மீட்டுத் தாருங்கள் என இறந்தவரின் மனைவி வழக்குத் தாக்கல் செய்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இந்தியாவைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் கடந்த ஜனவரி 24 அன்று சவுதி அரேபியாவில் உள்ள தனது பணியிடத்தில் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். 

இந் நிலையில் அவருக்கு ஜித்தாவில் உள்ள இந்தியத் துணைத் துாதரகத்தினால் வழங்கப்பட்ட மரணச் சான்றிதழில் தவறுதலாக அவர் முஸ்லிம் என குறிப்பிடப்பட்டிருந்ததினால் அவரது உடலுக்கு இஸ்லாமியர்களின் முறைப்படி இறுதிக்கிரியைகள் இடம் பெற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதனை அறிந்த அவரது மனைவி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தனது கணவர் ஒரு இந்து அவரது உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்ய அவரது உடலின் மனித எச்சங்களையாவது பெற்றுக் கொடுக்குமாறு வழக்குத் தொடர்ந்ததனையடுத்து சவுதியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சவுதி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இறந்தவரின் உடலை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்காக அவரது உடலை தோண்டி எடுக்க அனுமதி கேட்டுள்ளனர்.

மேலும் குறித்த பெண்ணிடம் இந்திய துணைத் துாதரக அதிகாரிகள் மொழிபெயர்ப்பு பிரிவின் தவறு குறித்து மன்னிப்பும் கேட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது அண்மையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற க.பெ. ரணசிங்கம் படத்தின் கதையினை ஞாபகப்படுத்திச் செல்கிறது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe