Ads Area

"சாய்ந்தமருது பிரதேச செயலாளராக எம்.எம் ஆஸீக் பதவியேற்பு."

(சர்ஜுன் லாபீர்)

சாய்ந்தமருது பிரதேச செயலாளராக நற்பிட்டிமுனைச் சேர்ந்த எம்.எம் ஆஸீக் இன்று(08) தனது கடமைகளை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இன்று திங்கள்கிழமை (8) முதல் சாய்ந்தமருது பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்று கடமையாற்றுகின்றார். என்பதோடு இவருக்கான நியமனம் அரச சேவைகள் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்டது.

இப்பதவியேற்பு நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹணிபா,நிந்தவூர் பிரதேச செயலாளர் டி.எம்.எம்.அன்சார்,அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.சாபீர்,கல்முனை மாநகர சபை பிரதி ஆணையாளர் எஸ்.எல்.பிர்னாஸ், உதவி திட்டமிடல்.பணிபாளர்கள் கணக்காளர்கள் காரியாலய உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.

இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த எம்.எம்.ஆஸீக் சம்மாந்துறை,உஹன ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் பதவி உயர்வு பெற்று சாய்ந்தமருது பிரதேச செயலாளராக கடமையேற்கவுள்ளார்.என்பதோடு இவரது துணைவியார் இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியடைந்து நிந்தவூர் பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றுகின்றார்.அத்தோடு இவர் முன்னாள் கல்முனை பிரதேச செயலாளர் மர்ஹும் ஏ.எல்.எம் பழீலின் மருமகனும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe