தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் 70 வயதிற்கு மேற்பட்ட உள்நாட்டு யாத்திரிகர்களுக்கு உம்ரா செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை சவுதி அரேபிய உம்ரா மற்றும் ஹஜ் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
சவுதியில் உள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களில் 18 வயது தொடக்கம் 69 வயது வரையானவர்கள் மாத்திரமே தற்போது உம்ராவுக்காக விண்ணப்பிக்க முடியும் 70 வயது மற்றும் அதனை தாண்டியோருக்கு அனுமதியில்லை. அதே போல் குழந்தைகளுக்கும் உம்ரா செய்ய விண்ணப்பிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதியில் உள்ள 70 வயதிற்கு மேற்பட்டே குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டாலும் கூட அவர்களுக்கு உம்ராவுக்கான அனுமதி வழங்கப்படாது, 70 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது உம்ரா அனுமதிக்கான தகைமையாக கருதப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 18 வயது தொடக்கம் 69 வயதிற்கு உட்பட்ட உம்ரா யாத்திரிகர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
எதிர்வரும் நாட்களில் கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.