தகவல் - சம்மாந்துறை அன்சார்.
குவைத்தில் உள்ள அல்- வஹா (Al Waha district) பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பணிப் பெண்ணான வேலை பார்த்து வந்த பெண் ஒருவர் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
31 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளார்.
சம்பவம் அறிந்த குவைத் பொலிஸார் மற்றும் தடவியல் நிபுணர்கள் உரிய இடத்திற்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது வீட்டில் வேலை செய்து வந்த குறித்த பணிப் பெண்ணுக்கு எனது வீட்டில் எந்தவொரு பிரச்சினைகளும் இருக்கவில்லை என அவரின் கபீல் (ஸ்பான்சர்) போலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதே வேளை மூன்று நாட்களுக்கு முன்னர் குவைத் தலைநகர் பிரதேசமான அப்துல்லா அல் சேலம் பகுதியில் மற்றொரு பிலிப்பைன்ஸ் நாட்டுப் பணிப் பெண் ஒருவர் குளியலறையில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதும் குறிப்பிடத் தக்கதாகும்.