சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்கள் தாய் நாடு செல்ல தற்போது இலங்கைத் துாதரகத்தில் தங்களைப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை, நேரடியாக சிரிலங்கன் எயார்லைன்சுக்கு சென்று உங்களுக்கான விமான டிக்கட்களை முன்பதிவு செய்து நாடு செல்லலாம்.
நாடு செல்ல தங்களை பதிவு செய்ய இலங்கைத் துாதரகத்திற்கு செல்லும் அனைவருக்கும் இலங்கைத் துாதரகத்தினால் மேற்குறித்த அறிவித்தல் வழங்கப்படுகின்றது.
முன்னர் சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்கள் தாய் நாடு செல்ல இலங்கை தூதரகத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது இதனடிப்படையில் சவுதி வாழ் இலங்கையர்கள் நாடு செல்ல தங்களை சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பதிவு செய்து வந்தனர் ஆனால் தற்போது அவ்வாறு பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
நாடு செல்ல விரும்புவோர் ரியாத், தமாம், மற்றும் ஜித்தா பிரதேசங்களில் உள்ள சிரிலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகங்களுக்குச் சென்று தங்களுக்கான விமான டிக்கட்களை புக் செய்து கொண்டு நாடு செல்லலாம்.
இந்த வீடியோவில் ரியாத்தில் உள்ள சிரிலங்கன் எயார்லைன்ஸில் விமான டிக்கட்களை பதிவு செய்ய காத்திருப்போரை காணலாம் மேலும் ரியாத், தமாம், ஜித்தா போன்ற நகரில் உள்ள சிரிலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகங்களின் லொகேசனும் கீழே தரப்பட்டுள்ளது.
குறிப்பு - நாடு செல்ல சிரிலங்கன் எயார்லைன்சில் மாத்திரமே டிக்கட் வழங்கப்படுகிறது.
Sri Lankan Airlines Location Riyadh.
Sri Lankan Airlines Location Dammam.
Sri Lankan Airlines Location Jeddah.