Ads Area

தனக்கு சொந்தமான 15 ஏக்கர் காணியினை 224 பேருக்கு இலவசமாக வழங்கி சகோதரர் வி.லவக்குமார்!

(ரூத் ருத்ரா)

கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்' என்ற தொணிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி இல்லாத குடும்பங்களுக்கு காணி பகிர்ந்தளிக்கும் நிகழ்வு சித்திரை புத்தாண்டு தினத்தில் இடம்பெற்றது.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள எத்தலை மேட்டுக்காடு எனும் இடத்தில் இந் நிகழ்வு வைபவ ரீதியாக பயனாளிகளுக்கு காணி உறுதி ஆவணம் வழங்கி வைக்கப்பட்டது.

கிரானிலுள்ள சமூக ஆர்வலரான குருசுமுத்து வி.லவக்குமார் என்பவரே தமக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர் காணியினை 224 பேருக்கு இவ்வாறு இலவசமாக வழங்கி வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் வறுமமை நிலையில் வாழும்,வாடகை வீட்டில் உள்ளோர்.மாற்றுத் திறனாளிகள் மற்றும் கணவனை இழந்தோர் என அடையாளம் காணப்பட்டு அவர்களின் எதிர்கால வாழ்வு கருதி இவ் காணி பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

பயணாளிகளின் பிள்ளைகளின் கல்வி, மேம்பாடு,பொருளாதாரம் விருத்தி கருதி இவ் நடவடிக்கையை முன்னெடுத்ததாக நன்கொடையாளர் வி.லவக்குமார் தெரிவித்தார்.

இதில் பொது தேவைகளான மத ஆலயம்,பாடசாலை,போன்றவற்றிக்கும் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அத்துடன் குடியிருப்பாளர்களின் எதிர்கால தேவை, வாழ்வாதாரத்தினை நிவர்த்தி செய்ய சிறுதோட்டப் பயிர் செய்கை நடவடிக்கைக்காக குத்தகை அடிப்படையில் மேலும் 15 ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அருட்தந்தை நியூட்டன் அடிகளார்,சகலமத ஜயப்பன் யாத்திரை குழு குருசாமி சாம்பசிவம் புனிதாபரன் மற்றும் இளைப்பாறிய மரமுந்திரிகை கூட்டுத்தாபன முகாமையாளர் டி.நிதர்சன் ஆகியோர்கள் அதிதிகாளாக கலந்து கொண்டதுடன் காணி வழங்குனருக்கு வாழ்த்தும் தெரிவித்தனர்.

செய்தி மூலம் - http://www.battinews.com/




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe