Ads Area

மாவடிப்பள்ளியில் மீட்கப்பட்ட சடலம் யாரென அடையாளம் காணப்பட்டது.

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)

கால்வாய் ஒன்றில் மீட்கப்பட்டு கல்முனை ஆதாரவைத்தியசாலையின் சவச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்த ஆணொருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(11) பிரதான வீதியோரத்தில் அமைந்திருந்த நீரோடும் கால்வாயில் இனந்தெரியாத ஒருவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்களின் தகவலின் பிரகாரம் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.

இச்சடலம் கொலைசெய்யப்பட்டு போடப்பட்டதா அல்லது இயற்கை மரணமா அல்லது வாகன விபத்தினால் ஏற்பட்டதா? என பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிவான் பார்வையிட்டிருந்தார்.

அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ள நிலையில் சடலத்தின் பக்கெட்டில் இருந்து கைத்தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டிருந்ததுடன் குறித்த சடலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டிருந்தது.

மேலும் சான்று பொருளாக சடலத்தின் பக்கெட்டில் இருந்த நிறுத்தப்பட்டுள்ள குறித்த கைத்தொலைபேசியை செயற்படுத்தி ஆராய்ந்த பொலிஸார் குறித்த சடலமாக மீட்கப்பட்டவர் வயது 30 மதிக்கத்தக்க வளத்தாப்பிட்டி பகுதியை சேர்ந்த எச.சிவகரன் மேசன் தொழிலாளி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் காரைதீவு பகுதியில் விவாகம் செய்தவர் எனவும் இவருக்கு வலிப்பு நோய் உள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய பிரேத பரிசோதனையை அடுத்து உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe