தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் 1.5 பில்லியன் பணத்தை சட்டவிரோதமான முறையில் பணப்பரிமாற்றம் செய்து சவுதிக்கு வெளியில் கடத்த முயன்ற 28 பேருக்கு 206 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவர்களிடமிருந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணக்கடத்தலில் ஈடுபட்டதாக 32 பேரை சவுதி அரேபிய பாதுகாப்புப் பிரிவினர் இவ் வருட ஆரம்பத்தில் கைது செய்திருந்தனர். இவர்களில் 9 சவுதி நாட்டைச் சேர்ந்தவர்களும், 23 வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இதில் 28 பேர் தற்போது குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு 206 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏனையவர்கள் தொடர்பில் மேலதிக விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சவுதி அரேபியாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம், சட்டவிரோத பணக் கடத்தல் ஆகியவற்றுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது குறிப்பிடத் தக்கதாகும்.