தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவின் ஜிசான் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவர் வீட்டில் இருந்த கைத் துப்பாக்கியை விளையாட்டாக தலையில் வைத்து அழுத்தியதில் துப்பாக்கியில் உள்ள குண்டு பாய்ந்து மரணமடைந்துள்ளார்.
மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சிறுமி, தனது வீட்டில் உள்ள அலமாரியில் இருந்து துப்பாக்கியை எடுத்து, வெளியில் குறி வைத்து அழுத்தி சுட்டுள்ளார் ஆனால் துப்பாக்கி வேலை செய்திருக்கவில்லை இதனால் வேலை செய்யாத துப்பாக்கிதானே எனக் கருதி அதனை தன் தலையில் வைத்து விளையாட்டாக தனது சகோதரியின் முன் அழுத்திச் சுட்டுள்ளார்.
இதனால் சற்றும் எதிர்பாராத நிலையில் அந்தத் துப்பாக்கி சுட்டதில் அதிலிருந்து குண்டு பாய்ந்து பரிபாதமாக இறந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரனைகளை தற்போது சவுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.