யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 1,600 தமிழ் இளைஞர்கள் மூன்று மாத காலத்திற்குள் இலங்கை ராணுவத்தில் சேர்ந்துள்ளனர் என ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத் தலைமையகத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் இளைஞர்கள் ராணுவத்தில் சேர முன்வந்திருப்பது மிகப்பெரிய வெற்றியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வில் பொது மக்களுக்கு தேவையான தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை வழங்குவதற்கு முன்னிலை வகிப்பதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் செய்த சேவையை ராணுவ தளபதி பாராட்டியுள்ளார்.
செய்தி மூலம் - http://www.dailymirror.lk