சம்மாந்துறை அன்சார்.
மட்டக்களப்பு கம்பஸ்ஸை பாதுகாக்கும் அறப் போராட்டத்தில் தமிழ்-முஸ்லிம் என அனைவரும் அணி திரள வேண்டும் என பிரபல எழுத்தாளரும், நடிகருமான ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநுால் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மட்டகளப்பு கம்பஸை (BATTICALO CAMPUS) அரசுடமையாக்கி தென்னிலங்கை பல்கலைக்கழகங்களோடும் இராணுவ உயர்கல்வி நிறுவனக்களோடும் இணைக்கிற அரசின் முயற்ச்சி முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல கிழக்கு தமிழர்களுக்கும் எதிரான முயற்ச்சியாகும். மட்டக்களப்பு கம்பஸ் (BATTICALO CAMPUS) அரசை கையகப்படுத்தினால் அறத்தின் அடிப்படையில் முஸ்லிம் பகுதியை சேர்ந்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தோடு இணைக்கபடவேண்டுமென ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறேன். அண்மையில் ஹிஸ்புல்லா அவர்களும் அதே நிலைபாட்டை எடுத்திருப்பது வரவேற்க்கத்தக்கதாகும்.
இது மட்டக்களப்பு கம்பஸ்ஸை (BATTICALO CAMPUS) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் அறப்போராட்டத்துக்கு தமிழ், முஸ்லிம் மலையக தமிழ் தலைவர்களையும் சிங்கள தலைவர்களையும் சர்வதேச சமூகத்தையும் நிதி உதவிய அரபு நாடுகளையும், அணிதிரட்ட வேண்டிய தருணமாகும். மட்டக்களப்பு கம்பஸ்ஸை (BATTICALO CAMPUS) பாதுகாக்கும் அறப்போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைவோம்.
மட்டகளப்பு கம்பஸ்ஸை (BATTICALO CAMPUS) பாதுகாக்கும் அறப்போராட்டத்தை புலம்பெயர்ந்த தமிழர்களும் புலம்பெயர்ந்த முஸ்லிம்களும் இணைந்து முன்னெடுக்க வேண்டுமென பணிவன்புடன் வேண்டுகிறேன் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.