Ads Area

கொரோனா பரவலையடுத்து பணக்கார இந்தியர்கள் தனி விமானத்தில் வெளிநாடு பயணம்

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வெகு வேகமாகப் பரவி வரும் நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை, மருந்துகள், மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடுகளையடுத்து இந்தியாவில் வசிக்கும் பணக்கார குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு தனி ஜெட்டில் பயணிப்பது நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் அன்றாட கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் சற்றே குறைந்து ஆறுதல் அளித்திருக்கிறது.

கடந்த 4 நாட்களுக்கு மேலாக அன்றாட கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தைத் தாண்டியிருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,23,144 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அன்றாட பாதிப்பு 3.5 லட்சத்திலிருந்து 3.25 லட்சத்துக்குக் குறைந்திருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயம். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 2771 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சமூக ஊடகங்களில் கொரோனா மருத்துவமனைகளில் இடமின்மை செய்திகளும் மருந்து, ஆக்சிஜன் தட்டுப்பாட்டு செய்திகளும் வந்தவண்ணம் இருப்பதால், இந்தியாவில் வாழும் பணக்கார குடும்பங்கள் சில வெளிநாடுகளுக்கு தனி விமானத்தில் பயணித்துள்ளனர்.

புதுடெல்லியைச் சேர்ந்த கிளப் ஒன் ஏர் என்ற தனியார் ஜெட் நிறுவனத்தின் சி.இ.ஓ, ராஜன் மெஹ்ரா கூறும்போது, “பணக்காரர்கள் என்று இல்லை, யாருக்கெல்லாம் தனியார் ஜெட் எடுத்துக் கொள்ள வசதி இருக்கிறதோ அவர்கள் எல்லோரும் தனியார் ஜெட்களில் பறக்கின்றனர்” என்றார்.

நாட்டில் கொரோனா பரவல் மக்களை பீதியடையச் செய்துள்ளது, மத்திய, மாநில அரசுகள் பரவலையும் மரணங்களையும் தடுக்க தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

பாலிவுட் சூப்பர்ஸ்டார்கள் மாலத்தீவுகளுக்குச் செல்கின்றனர். ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஆண்ட்ரூ டை, ஜாம்ப்பா, கேன் ரிச்சர்ட்ஸன் விலகி ஆஸ்திரேலியா சென்று விட்டனர், இந்திய வீரர் அஸ்வின் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலிருந்து விலகி கொரோனாவுடன் போராடும் தன் குடும்பத்தினருக்கு பக்கபலமாக இருப்பதாக அறிவித்து சென்னை திரும்பி விட்டார்.

ஆனால் கனடா, தற்போது ஆஸ்திரேலியா, ஹாங்காங், யுஏஇ, மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்தியாவிலிருந்து பயணங்கள் மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு தடை விதித்துள்ளது இதனையடுத்து மாலத்தீவுகளில் நெரிசல் அதிகமாகியுள்ளது, இதனையடுத்து அங்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியிலிருந்து துபாய்க்குச் செல்ல 1.5 மில்லியன் ரூபாய்கள் கட்டணம் ஆகும். எப்படி வெளியூருக்குக் காரில் சென்றால் கார் திரும்பி காலியாக வரும் என்று கூறி மொத்தமாக காசு கறப்பார்களோ அப்படியேதான் இந்த பிரைவேட் ஜெட்டும் செயல்படுகிறது.

விமான டிக்கெட்டுகளின் விலையும் உயர்ந்துள்ளன. ஒரு வழி இகானமி கிளாஸ் டிக்கெட் கட்டணம் துபாய்க்கு 1,300 டாலர்களாக உள்ளது, அதாவது வழக்கமான கட்டணத்தை விட 10 மடங்கு அதிகம். மக்கள் எப்படியாவது இந்தியாவிலிருந்து வெளியேறி விட வேண்டும் துடிப்பாக இருப்பதாகக் கூறுகிறார் மெஹ்ரா.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe