Ads Area

தடை செய்யப்பட்ட நாட்டிற்கு தடையை மீறி சென்றவா் திரும்பி வந்தபோது சென்னை விமானநிலையத்தில் கைது.

இந்திய அரசால் பாதுகாப்பு இல்லாத நாடு என்று தடை செய்யப்பட்ட லிபியா நாட்டிற்கு தடையை மீறி சென்றவா், திரும்பி வந்தபோது சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கத்தார் நாட்டு தலைநகா் தோகாவிலிருந்து கத்தார் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இரவு சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுறிமை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது சென்னையை சோ்ந்த முகமது சமீம் (46) என்ற பயணி லிபியா நாட்டிலிருந்து இஸ்தான்புல் வந்து அங்கிருந்து கத்தார் நாட்டிற்கு சென்று, கத்தார் நாட்டிலிருந்து விமானத்தில் சென்னை வந்தார்.

லிபியா நாடு இந்தியா்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு என்ற பட்டியலில் உள்ளது. எனவே இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு நலன் கருதி இந்தியா்கள் யாரும் லிபியா நாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று தடைவிதித்துள்ளது. அந்த தடையை மீறி, முகமது சமீம் லிபியா நாட்டிற்கு சென்றுவந்ததால், அவரை வெளியே அனுப்பாமல் நிறுத்தி விசாரித்தனா்.

அப்போது, முகமது சமீம், தான் பிரபலமான ஒரு மருந்து கம்பெனியில் பார்மசிஸ்ட்டாக பணியாற்றி வருவதாகவும்,அந்த கம்பெணிதான், தன்னை பணி நிமித்தமாக கடந்த 2019-ஆம் ஆண்டில் லிபியாவிற்கு அனுப்பிவைத்தது.

முறையான ஆவணங்களுடன் அகமதாபாத் விமானநிலையத்தில் இருந்து இணைப்பு விமானங்கள் மூலம் லிபியா சென்று, அங்கு 2 ஆண்டுகள் பணியில் இருந்தேன். அப்போது லிபியா தடை செய்யப்பட்ட நாடு என்று என்னிடம் கூறவில்லை என்று கூறினார். ஆனால் சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்திய அரசால் பாதுகாப்பு இல்லாத நாடு என்று தடை செய்யப்பட்ட நாட்டிற்கு சென்றதாக முகமது சமீம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா். அதோடு மேல் நடவடிக்கைக்காக அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனா்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe