தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் யாராகினும் கொரோனா வைரஸ் தொடர்பிலும், தடுப்பூசி தொடர்பிலும் உண்மைக்கு மாற்றமான விதத்தில் வதந்திகளைப் பரப்பினால் அவர்களுக்கு எதிராக 1 மில்லியன் சவுதி ரியால் அபராதமும், 5 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களையும், குடியிருப்பாளர்களையும் பாதுகாக்க பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது அத்தோடு கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசிகளையும் குடி மக்களுக்கும், குடியிருப்பாளர்களுக்கும் இலவசமாக வழங்கி வருகின்றது.
இந் நிலையில் மக்களை குழப்பும் விதத்தில் கொரோனா தொடர்பிலும், தடுப்பூசி தொடர்பிலும் யாராகினும் வதந்திகள் பரப்பினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு 1 மில்லியன் அபராதமும் 5 வருட சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆகவே சவுதியில் வசிக்கும் தமிழர்கள் இது விடையத்தில் மிக அவதானமாக இருந்து கொள்ளவும், கொரோனா தொடர்பிலான எந்த வித போலியான தகவல்களையும், செய்திகளையும் பொது வெளியில் பகிர்ந்து கொள்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
செய்தி மூலம் - https://gulfnews.com