சம்மாந்துறையில் உள்ள பள்ளிவாசல்களை பசுமைப்படுத்துவோம் எனும் தொனிப் பொருளிலான வேலைத்திட்டம் ஒன்று சம்மாந்துறை சமூக உதவி மற்றும் திட்டமிடலுக்கான (Integration of Social Aid And Scheme) அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதனடிப்படையில் இன்று சம்மாந்துறை ஹிஜ்ரா (பத்ர்) ஜும்மா பள்ளிவாசலில் மரநடுகை நிகழ்வு ஒன்று இவ் அமைப்பினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சமூக உதவி மற்றும் திட்டமிடலுக்கான அமைப்பினர் ஆசிய அபிவிருத்தி வங்கியில் பணி புரியும் வை.பி.எம். அஸ்மி யாசீன் அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க அஸ்மி யாசீன் அவர்களினால் தேவையான மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டு அவைகள் இன்று பள்ளிவாசலில் நடப்பட்டது.
சம்மாந்துறை ஹிஜ்ரா (பத்ர்) ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் எம்.எம். அப்துல் கபூர் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியில் திட்டப் பகுப்பாளராக கடமை புரியும் வை.பி.எம். அஸ்மி யாசீன் அவர்கள் கலந்து கொண்டு மரங்களை நட்டு வைத்தார்கள்.
மேலும் இந் நிகழ்வில், சம்மாந்துறை ஹிஜ்ரா (பத்ர்) ஜும்மா பள்ளிவாசலின் செயலாளர் ஏ.எல். பைசல், சமூக உதவி மற்றும் திட்டமிடலுக்கான அமைப்பின் தலைவர் எஸ்.எல்.எம். றுகைமி, செயலாளர் ஏ.எம்.ஏ. தஸ்னீம், அங்கத்தவர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஏ.ஜே. ஷாமில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
குறிப்பு - மர நடுகைக்குத் தேவையான மரங்கள் தேவைப்படுவோர் சமூக உதவி மற்றும் திட்டமிடலுக்கான அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
SLM.Ruhaimy - 0775775355
AMA. Thasneem - 0770582327