Ads Area

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள் வெற்றிகரமாக அறுவடை.

 (எம்.என்.எம்.அப்ராஸ்)

அம்பாறை மாவட்டம் கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள் செய்கையானது  வெற்றிகரமாக அறுவடை  செய்யப்பட்டது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப் .ரஹ்மான் அவர்களின் தலைமையில் இவ் மஞ்சள்  அறுவடை  நேற்று (10 )இடம்பெற்றது.

சுமார் 25kg  அளவிலான மஞ்சள் இதன் போது அறுவடை செய்யப்பட்டதுடன், இவ்  அறுவடை நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள்  , தாதியர்கள்,  ஊழியர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர் .

மேலும் இவ் வைத்தியசாலை வளாகத்தில் பயன்தரும் செடி வகைகள்  பல பயிரிடப்பட்டுள்ளதுடன் , இதேவேளை கடந்த வருடங்களில் தேசிய ரீதியில்  இவ் வைத்தியசாலைக்கு ஜனாதிபதி சுற்று சூழல் விருது  ,தேசிய தூய்மை உற்பத்தி விருது ஆகியவற்றில்  சான்றிதழ் மற்றும் பதக்கம் என்பன கிடைக்கப்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe