Ads Area

சவுதியில் யாராவது கொரோனா வைரசை வேண்டுமென்று பரப்பினால் 5 வருடம் சிறை, 5 இலட்சம் அபராதம்.

சவுதி அரேபியாவில் கொரோனா வைரசினை யாராவது வேண்டுமென்று பரப்பினால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என சவுதி அரேபியா அந் நாட்டு குடிமக்களையும், குடியிருப்பாளர்களையும் எச்சரித்துள்ளது.

இவ்வாறு வேண்டுமென்று கொரோனா வைரசை பரப்புவோருக்கு 5 வருட சிறைத் தண்டனையும், 5 இலட்சம் சவுதி ரியால் அபராததும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசினை வேண்டுமென்று பரப்பியர் வெளிநாட்டைச் சேர்ந்தவராக இருந்தால் அவர் உடனடியாக நாடுகடத்தப்படுவார் என்றும் அவரால் மீண்டும் சவுதிக்குல் நுழைய முற்றாகத் தடை விதிக்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி மூலம் - https://saudigazette.com.sa

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe