பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
அம்பாறை மாவட்டத்தில் சுமார் 80 ஹெக்டேயர் விவசாய நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை பண்ணப்படவுள்ளதாக மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்திலுள்ள டீ.எஸ்.சேனநாயக்க சமுத்திரம் மற்றும் ஏனைய நீர்த்தாங்கு நிலைகளில் விவசாயிகளுக்குத் தேவையான நீர் காணப்படுவதுடன், மாவட்டத்திலுள்ள சகல விவசாயக் காணிகளிலும் நெற்செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அக்கரைப்பற்று, ஒலுவில், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், நாவிதன்வெளி போன்ற பிரதேசங்களில் தற்போது விவசாயிகள் விதைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளும் விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் மே மாத இறுதிக்குள் விதைப்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென்ற ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.