அரபாத் (Arafath_nok)
சம்மாந்துறையில் மையவாடியை அழகு படுத்த போகிறோம் என்று பிடுங்க பட்ட ஈச்சை மரங்கள் இறந்து கிடப்பதற்கு காரணம் பிரதேச சபையின் கவன குறைவா ? அல்லது பிழையான முடிவா ?
நவீன உலகம் புதிதாக மரங்களை நடுவோம் அதைவிட இருக்கும் மரங்களை பாதுகாப்போம் என்று பல திட்டங்கள் முன்னெடுத்து வருகின்ற கால கட்டத்தில் ஆங்காங்கே எமதூரில் இயற்கையாக அழகாக அரிதாக இருந்த ஈச்சை மரங்களை ஊர் மக்களினால் பல எதிர் விமர்சனம் எதிர்ப்புகள் எழுந்தும் அதனைப் பொருட்படுத்தாமல் பிடிங்கி மையவாடி அழகு படுத்த போகிறோம் எதிர்கால பொருளாதார பயன் ஏற்படுத்த போகிறோம் என்று பதில் சொல்லி விட்டு சரியான திட்டமிடலும் முறையான பராமரிப்பும் இல்லாமல் பிடுங்கப்பட்ட அந்த மரங்கள் இன்று மண்ணோடு மண்ணாகி இறந்து கிடக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு ஈச்சை மரங்களை பிடுங்கும் நடவடிக்கைக்கு எதிராக சம்மாந்துறையில் உள்ள அதிபர் ஒருவர் தனது எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தார். தனது வீட்டுக்கு எதிராக இருந்த மரத்தினை தான் நல்ல முறையில் பராமரித்து வந்ததாகவும் அந்த மரத்தைக் கூட சம்மாந்துறை பிரதேச சபையினர் தனது எதிர்ப்பையும் மீறி பிடுங்கிச் சென்றதாகவும் முறையிட்டிருந்தார்.
இவ்வாறு சம்மாந்துறை பிரதேச சபையினால் பிடுங்கப்பட்ட மரங்களில் ஒரு சில மரங்களை தவிர அனைத்தும் வாடி வதங்கி கரிகி மடிந்து மண்ணாகி விட்டது இதற்கு முழு காரணம் சம்மாந்துறையின் பிரதேச சபைத் தவிசாளரின் சிறந்த திட்டம் இல்லாமையா??? அல்லது வேறு காரணமா ??? இதுதான் இன்று எமது ஊரின் நிலை.
வரும் முன் காப்பாற்றவும் அதற்கு ஏற்ப தீர்மானம் எடுக்கவும் அரசியல் மற்றும் ஊர் அதிகாரங்களில் இருக்கும் தலைவர்கள் தவறுவதால் அதன் விளைவுகள் எமது ஊர்க்கும் மக்களுக்கும்தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு சரியான நேரத்தில் சரியான திட்டங்கள் சரியான தீர்மானங்கள் எடுக்க முடியாமல் போனதால் தான் இன்று எமதூரின் சொத்தான பஸ் நிலையம் கேள்வி குறியாக உள்ளது.
ஒரு நாட்டின் வளர்ச்சியோ அல்லது அல்லது ஊர் வளர்ச்சியோ சிறந்த திட்டமில் தெளிவான தூர நோக்கில் தங்கி உள்ளது அவ்வாறு எந்த சிந்தனையும் இல்லாதவர்களிடம் அதிகாரம் இருக்குமானால் யாவும் நஷ்டமே என்பதே காலத்தின் படிப்பினை.
நிகழ்கால வளங்களை காப்போம்
எதிர்கால வளர்ச்சியை பார்ப்போம்...