துபாயில் இரு தினங்களுக்கு முன்பு நிர்வாணமாக போஸ் கொடுத்த பெண்களை நாடுகடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
துபாயின் மெரினாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் ஆபாசமாக ஆடைகளை களைந்து சுமார் 40 பெண்கள் நிர்வாணமாக போஸ் கொடுத்த வழக்கில் அந்த குழுவினரை நாடுகடந்த தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிகாரி இசம் இசா அல் ஹுமாய்டன் கூறுகையில்,
அரசு தரப்பு தனது விசாரணையை முடித்துவிட்டதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நாடு கடத்தப்படுவார்கள் என்றும் கூறினார்.
இரு தினங்களுக்கு முன்பு ஒரே அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் நிர்வாணமாக நிற்கும் பெண்கள் குழு புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த பின்னர் வீடியோவில் தோன்றினர். இதையடுத்து இந்த பெண்கள் குழுவை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது எனவும் மேலும், சம்பந்தப்பட்டவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நாடு கடத்த உத்தரவிடப்பட்டது எனவும், இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து எதுவும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சம்பந்தப்பட்ட துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கடந்த இரண்டு நாட்களாக இந்த செய்தி வளைகுடா உட்பட உலகளவில் பல்வேறு தரப்பினர் இடையில் பேசுபொருளான சம்பவம் ஆகும்.