Ads Area

சாய்ந்தமருதில் எவரிடமும் வாகனத் தரிப்புக் கட்டணம் செலுத்த வேண்டாம்..! கல்முனை மாநகர சபை அறிவிப்பு.

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவு எல்லையினுள் எவரிடமும் வாகனத் தரிப்பிடக் கட்டணம் செலுத்த வேண்டாம் என கல்முனை மாநகர சபை அறிவித்துள்ளது.

இப்பிரதேசத்தில் சில நபர்கள் வாகனத் தரிப்புக் கட்டணம் அறவிடுவதாக மாநகர சபைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

ஆனால் இவ்வாறு வாகனத் தரிப்புக் கட்டணம் அறவிடுவதற்கு மாநகர சபையனால் பள்ளிவாசலுக்கோ வேறு எவருக்குமோ அனுமதி வழங்கப்படவில்லை என்பதை இத்தால் அறியத்தருகின்றோம்.

ஆகையினால், சாய்ந்தமருது பிரதேசத்தில் பிரதான வீதியாயினும், உள்ளுர் வீதிகளாயினும் மாநகர சபை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை எவரிடமும் வாகனத் தரிப்புக் கட்டணம் செலுத்த வேண்டாம் என வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

எவராவது வாகனத் தரிப்புக் கட்டணம் கோரினால் உடனடியாக மாநகர சபைக்கு அறிவிக்கவும்.

மேலும், இதன் பின்னர் எவராவது வாகனத் தரிப்புக் கட்டணம் அறவிட்டால் இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இத்தால் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe