முஹமட் ரிஷ்விகான்.
சம்மாந்துறை ஜமாலியா பாடசாலையில் கடந்த 2019, 2020 ம் ஆண்டுகளில் நடைபெற்று முடிந்த புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் (08) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் மஹிஷா பானு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக சம்மாந்துறை கோட்டக்கல்வி பணிப்பாளர் சபூர் தம்பி சேர் அவர்களும் ,விஷேட அதிதியாக நீர்ப்பாசன பொறியியலாளர் நவாஸ் சேர், அவர்களும் பாடசாலையின் இனைப்பாளர் அல்ஹாஜ் அச்சி முஹம்மட் சேர் அவர்களும், ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர்களும், பாடசாலை ஆசிரிய ஆசிரியைகளும், ஜமாலியா பள்ளிவாசல் நிர்வாக தலைவர் அவர்களும்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்..
2019 ம் ஆண்டில் 154 புள்ளிகளை பெற்ற முஹம்மட் றிபாத்..2020ல் வரலாற்று சாதனை படைத்த மாணவர்களான பாத்திமா ஹஸ்னா 162 புள்ளிகள். முஹம்மட் சிம்ஹான் 163 புள்ளிகள்,மிஸ்பத் றஜா 171 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் பெற்றோர்களுக்கும் நன்மதிப்பை பெற்று தந்த மாணவ செல்வங்களுக்கு உயர்ந்த வரேற்புடன் நினைவுப் பதக்கங்களும் நினைவு கேடயங்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் இணைந்து அதிபர் ஆசிரியர்களுக்கு நினைவுச்சின்னமும் பரிசில்களும் வழங்கி கௌரவித்தனர் .... இந் நிகழ்வில் வெற்றிப்புள்ளியை அண்மித்த ஏனைய மாணவர்களும் நினைவுச்சின்னங்களுடன் பாராட்டபட்டனர்..குறிப்பாக. பாத்திமா சஹாதா 156 புள்ளிகள் மற்றும் முஹம்மட் அக்ஸிப் 149 புள்ளிகளை பெற்றனர்..ஏனைய மாணவர்களும் இனைத்து கொள்ளபட்டனர்.
இவ் விழாவில் பாடசாலை சார்பாக 2019 ம் ஆண்டு நடைபெற்ற ஆங்கில தின போட்டியில் மாகாணரீதியாக கலந்து கொண்ட மாணவி பாத்திமா மஹிஸா அவர்களும் பாராட்டி கௌரவிக்கபட்டார்.
இவ் வெற்றி விழாவுக்கு காரணமாக அமைந்த அதிபர் மஹிஸா பானு, ஆசிரியர்களான நஜீமா பரீதா, றைஸா,இர்பான்..ஆகியோர்களுக்கும் பாடசாலையில் நடை பெறும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்குமான ஆரம்ப பணிகளை சிறப்புடன் செயற்படுத்தும் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ரி.சலாம் சேர் அவர்களுக்கும் ஏனைய ஆசிரிய ஆசிரியைகளுக்கும் உளம் நிறைந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும்... மாணவர்களும் பெற்றோர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்களும். தெரிவித்து கொண்டனர்...
இவ் விழாவினை பாடசாலை நிர்வாகமும் பெற்றோர்களும் இனைந்து சிறப்பித்தனர்.