(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் அங்கத்தவர்கள் மற்றும் சமூக நலன்விரும்பிகளின் பங்களிப்பில் , வருடா வருடம் ரமளான் மாதத்தினை முன்னிட்டு செயற்படுத்தி வரும் நிகழ்ச்சித் திட்டமான உலருணவு வினியோக நிகழ்சித் திட்டமானது, இம்முறை கொரோனா காரணமாக வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் கல்முனை வாழ் சமூகத்தின் தேவைகளை கருத்திற்கொண்டு அவர்களுக்கு உதவும் முகமாக கல்முனை பிராந்தியத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்காக குறித்த உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
அமைப்பின் தலைவர் வைத்தியர். எம். எச். ரிஸ்பின், செயலாளர் எஸ்.எல்.எம். இப்ராகிம் ஆகியோருடன் இணைந்து அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மூலம் உரிய பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.