Ads Area

கல்முனையில் முகக்கவசமின்றி வந்தால் பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் : கண்டிப்பான உத்தரவு

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

நோன்பு காலத்தில் முகக்கவசம் அணியாமல்  வருபவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என்பதை கண்டிப்பாகக் குறிப்பிட்டுள்ளோம்.

அதே போன்று, நுகர்வோரிடம் வர்த்தக நிலையத்தில் பொலித்தீன் பாதுகாப்பு மற்றும் முகக்கவசமின்றி உள்ள வர்த்தகர்களிடம் பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டாமெனவும் கூறியுள்ளோம்.

நோன்பு காலத்தில் தொடர்ச்சியாக இதனைச் செயற்படுத்த நாம் சகல தரப்பினரின் ஒத்துழைப்பினை நாடியுள்ளதாக கல்முனை மாநகர பொதுச்சந்தை வர்த்தக சங்க பிரதிச்செயலாளர் எஸ்.எல்.ராயீஸ் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்க அலுவலகத்தில் புதன்கிழமை (21) மாலை நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்,

கடந்த காலங்களில் கொரோனா தடுப்பு முன்னெடுப்புகளில் எம்மோடு இராணுவத்தினர், கல்முனைப் பொலிஸார், கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பிரிவினர், பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக கொரோனா தடுப்பினை மேற்கொண்டிருந்தோம்.

இது போன்று, இனிவரும் காலங்களிலும் இவர்களின் ஒத்துழைப்புடன் கொரோனா தடுப்பு முன்னெடுப்புகளை தொடர்ந்து செயற்படுத்துவோம். 

எமது பொதுச்சந்தை கொரோனா அனர்த்தம் காரணமாக மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்தது.

தற்போது எமது நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் 3வது அலையாக உருவாகி இருக்கின்றது என்பதை சுகாதாரப் பிரிவினால் அறியப்பெற்றிருந்தோம்.

இந்த கொரோனா வைரஸ் தடுப்பு சம்பந்தமாக ஏற்கனவே எவ்வாறான தடுப்பு செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளோம். அது மாத்திரமன்றி, கடந்த காலங்களில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் ஜி.சுகுணனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சிறப்பாக தடுப்பு நடவடிக்கைகளைக் கையாண்டு வந்தோம்.

தற்போது மீண்டும் 3வது கொரோனா அலை உருவாகும் இந்த சந்தர்ப்பத்திலும் தடுப்புச் செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளோம்.

எமது சந்தைத்தொகுதியில் சுகாதார நடைமுறைகளை எவ்வாறு நுகர்வோர், வர்த்தகர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை கை ஒலிபெருக்கியூடாகவும் பொருட்களை எவ்வாறு பாதுகாப்பாகப் பெறுதல் என்பதையும் தினந்தோறும் நாங்கள் அறிவித்து வருகின்றோம்.

அது மாத்திரமன்றி, எமது சங்கத்தினால் சுவரொட்டியூடாக அறிவுறுத்தல்களை வழங்கி காட்சிப்படுத்தி வைத்திருக்கின்றோம்.

கடந்த காலங்கள் போன்று மாநகர சபையின் உதவியுடன் தண்ணீர் பௌசர்களைக் கொண்டு நுகர்வோருக்கு கைகழுவுதல் செயற்பாட்டைச் செயற்படுத்தியுள்ளோம். முகக்கவசத்தை முறையாக அணிய வேண்டுமென்பதை அறிவுறுத்தி வருகின்றோம்.

அதாவது, வர்த்தகர்கள், நுகர்வோர்கள் வாய், மூக்கு மூடப்பட்டுள்ள நிலையில் அணிந்திருக்க வேண்டும். 

இது சம்பந்தமாக எமது வர்த்தகர்களை அறிவுறுத்தியுள்ளோம். அதாவது, பொருட்களைக் கொள்வனவு செய்ய வரும் மக்கள் முறையாக முகக்கவசம் அணியாது வந்தால், பொருட்களை விற்பனை செய்ய வேண்டாமென்பதை கண்டிப்பாகக் குறிப்பிட்டுள்ளோம்.

அதே போன்று, நுகர்வோரிடம் வர்த்தக நிலையத்தில் பொலித்தீன் பாதுகாப்பு மற்றும் முகக்கவசமின்றி உள்ள வர்த்தகர்களிடம் பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டாமெனக் கூறியுள்ளோம்.

நோன்பு காலத்தில் தொடர்ச்சியாக இதனைச் செயற்படுத்த நாம் சகல தரப்பினரின் ஒத்துழைப்பினை நாடியுள்ளோம் எனக்கூறினார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe