(றாசிக் நபாயிஸ், பி.எம்.எம்.ஏ.காதர், ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனைச் சேர்ந்த விரிவுரையாளர் ஏ.ஜே.எல்.வஸீல் எழுதிய "கல்விப் பணியில் ஏ.எம்.ஏ.சமது அதிபர்" நூல் வெளியீட்டு நிகழ்வு (03-04-2021) சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் (VMICH) வி.எம்.ஐ.சி.எச்.மண்டபத்தில் மர்ஹும் அல்-ஹாஜ் ஏ.எம்.அபூபக்கர் ஆசிரியர் அரங்கில் ஷம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபர் ஏ.எல்.சக்காப் தலைமையில் நடைபெற்றது.
மருதமுனை வரலாற்றில் ஓய்வு நிலை அதிபர் ஒருவருக்கு முதன் முதலாக புத்தகம் ஒன்று எழுதப்பட்டு வெளியீட்டு வைக்கப்படும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அல்-ஹாஜ் எம்.ரீ.ஏ.நிஸாம் கலந்து கொண்டார்.
கல்வியாளர்கள், இலக்கிய அதிதிகள், பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் "கல்விப் பணியில் ஏ.எம்.ஏ.சமது அதிபர்" பற்றிய நூலை நூல் ஆய்வுரையை தென்கிழக்குப் பல்கலைக்கழக அரசியல் துறைத்தலைவர் கலாநிதி எம்.எம்.பாஸில் வழங்கினார். நூலுக்கான பதிலுரையை
ஓய்வு நிலை அதிபர் சாமசிறி "தேசகீர்த்தி" ஏ.எம்.ஏ.சமது நிகழ்த்தியதுடன் சிறப்புரைகளை அல-மனார் மத்திய கல்லூரியின் உதவி அதிபர் ஏ.எம்.அன்ஸார் மற்றும் வர்த்தகர் எஸ்.எம்.அன்ஸார் மரைக்கார் நிகழ்த்தினர்.
நூல் பற்றிய ஏற்புரையை நூலாசிரியரியரும் விரிவுரையாளருமான ஏ.ஜே.எல்.வஸீல் நிகழ்ந்தினார்.
இந்நிகழ்வில் ஓய்வுநிலை அதிபருக்கு பள்ளிவாசல், பொது அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் என பல அமைப்புக்கள் நினைவு பரிசில்கள் மற்றும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்கள்.