Ads Area

சம்மாந்துறைக்கு திருமண நிகழ்வொன்றுக்கு சென்ற வேன் குடை சாய்ந்து விபத்து.

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் கடவத்தமடு பிரதேசத்தில் வேன் ஒன்று டயர் வெடித்து குடை சாய்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து சம்மாந்துரை பிரதேசத்திற்கு திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பயணித்த வேனின் டயர் வெடித்ததில் வேன் குடைசாய்ந்து அருகில் உள்ள வயலுக்குள் வீசப்பட்டுள்ளது.

வேன் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில் அதில் பயணித்த இருவரில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Madawala news.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe